பியூட்டு ஸ்பாட்
காதலி: "நீங்க இன்னிக்கு ஸ்வீட் வாங்கித் தர்றேன்னு சொல்லும் போது நான் வயித்திலே நெருப்பைக் கட்டிக்கிட்டு
இருந்தேங்க."
காதலன்: "ஏன்? எதுக்கு?"
காதலி: "எங்கே அல்வா கொடுத்திடப் போறீங்களோன்னு தான்."
"மஞ்சுவுக்கு ஏண்டா உன் நெஞ்சிலே இடம் இல்லேங்குறே?"
"அவ செமக்குண்டுடா!"
"காதல் என்றால் என்ன சார்?"
" 'டீன்ஏஜ் பையன்' கேக்கிற கேள்வியா இது? ஒரு நல்ல டாக்டரைப் பாரு!"
"பொண்ணு கன்னத்திலே 'பியூட்டு ஸ்பாட்' அழகுக் குழி இருக்குடா!"
"அவள் ரோடு கான்ட்ராக்டர் மகடா! அழகுக் குழிமட்டுமா? ஆழக்குழியும் இருக்கும்!"
"கடவுளே! நீ காதலிச்சிருக்கியா?"
"நான்தான் சிவனேன்னு கண்ணை மூடிக்கிட்டு இருக்கேனே?"
