மூத்த 'குடி'மகன்
"மன்னர் அந்த ஆளுக்கு பத்துக் கசையடிகள் கொடுக்கச் சொல்கிறாரே, ஏன்?"
"ராஜா என்று அழைப்பதற்கு பதிலாக 'ராசா' என்று சொல்லிக் கேவலப்படுத்திவிட்டாராம்!"
"அந்த நடிகை நடிப்புக்கு முழுக்குப் போடப் போறாங்களாம்..."ஏன்?"
"அவங்க முழுகாம இருக்காங்களாம்"
"என்னங்க வெளியில நம்ம நாய் பயங்கரமா குரைக்குது!"
"ரோட்ல போலீஸ்காரங்க யாராச்சும் போவாங்க!"
"இனிமே இந்த வீட்ல யாரும் கண்ணீர் சிந்த மாட்டாங்க..."
"ஏன்?"
"டி.வி-யை வித்துட்டேன்."
"அந்த ஆளு டாஸ்மாக் பாருக்குள்ளே நுழைந்ததும் முதல் இடம் கொடுத்து மரியாதை செய்வாங்க."
"ஏன்?"
"மூத்த 'குடி'மகனாச்சே!"
