பச்சைக்கிளி

bookmark

"என் மாமியாரு சரியான பச்சைக்கிளி மாதிரி..." "அவ்வளவு அழகா?."
"இல்ல". அவங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க."

"நந்தவனத்துக்குப் போவதாகச் சொன்ன மகாராணி, பேருந்தில் ஏறி எங்கே செல்கிறார்..?"
"நந்தனம் போகிறாரோ என்னவோ..!"

"மன்னர் அந்த ஆளுக்கு பத்துக் கசையடிகள் கொடுக்கச் சொல்கிறாரே, ஏன்?"
"ராஜா என்று அழைப்பதற்கு பதிலாக 'ராசா' என்று சொல்லிக் கேவலப்படுத்திவிட்டாராம்!"

"ஏம்பா! மூணு மாசத்துக்கு ஒருதடவை வீட்டை மாத்திக்கிட்டே இருக்கே?"
"என்ன செய்ய?" வீட்டுக்காரியை மாத்த முடியலையே!"

"வழுக்கைத் தலையா ஒருத்தர் இருக்காரே? புது அப்பாயின்மெண்டா?"
"ஆமா! நிறைய மொட்டைக்கடுதாசி வருது அதைப் பார்க்கத் தான் இந்த ஏற்பாடு!"