வரைக்காட்சிப் படலம் - 912
அரசமாளிகையை அறிந்து சேர்தல்
மைந்தரும் மங்கையரும் திரிந்த காட்சி
912.
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழியாரும்.
வடிக்கும் அயில் வீரரும். மயங்கினர் திரிந்தார்;
இடிக்கும் முரசக் குரலின். எங்கும் முரல் சங்கின்.
கொடிக்களின் உணர்ந்து. அரசர் கோநகர் அடைந்தார்.
நடிக்கும் மயில் என்ன - ஆடும் மயிலைப் போல; வரும் -
வருகின்ற; நவ்வி விழியாரும் - மான் போன்ற கண்களையுடைய
மகளிரும்; வடிக்கும் அயில் வீரரும் - வடித்துக் கூர்மையாக்கிய
வேல் வீரரும்; மயங்கினர் திரிந்தார் - மயங்கிய வண்ணம் திரிந்தனர்
(தாம் போகும் இடம் இன்னதென்று தெரியாததால்); இடிக்கும் முரசக்
குரலின - (பின்பு) முழங்குகின்ற மங்கள முரசின் ஒலியாலும்; ஏங்கும்
முரல் சங்கின் - எங்கும் ஒலியெழும் சங்கநாதங்களாலும்; கொடிகளின்
- கொடிகளாலும்; உணர்ந்து - (அரசனது மாளிகை இதுவென) தெரிந்து
கொண்டு; அரசர் கோநகர் அடைந்தார் - அரசன் தங்கிய
மாளிகையை அடைந்தார்கள்.
பட மாடங்கள் பலவும் ஒரே தன்மையில் அமைந்திருந்தமையால்
வேற்றுமை தெரியாமல் மயங்கி. முரசு. சங்கு. கொடிகளால் அரசன்
தங்கிய மாடம் இதுவென்று அறிந்தனர் என்பது ஒவ்வொரு மாடமும்
அரச மாளிகை போல இருந்தது. 15
