வில்வப்பழம்
வில்வப்பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்த நோய் குறையும்.
வாய்ப்புண், மலச்சிக்கல், குடல் புண், காசநோய், சளி, மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்றவற்றையும் வில்வப்பழம் குணமாக்கும்.
வில்வப்பழத்தில் தசை வளர்ச்சிக்கு உதவும் பெக்டின் என்ற சத்து காணப்படுகிறது.
வில்வப்பழத்தைப் பாலுடன் கலந்து கொஞ்சம் மிளகுப் பொடி சேர்த்து சாப்பிட தாது விருத்தி உண்டாகும்.
மேலும் சரும நோய், வயிற்றுப் போக்கு மற்றும் சீதபேதி உள்ளிட்ட நோய்களுக்கும் வில்வப்பழம் சிறந்து விளங்குகிறது.
