அரளிப் பூ

அரளிப் பூ

bookmark

அரளிப் பூ

அரளி அல்லது அலரி நச்சுத் தன்மை வாய்ந்த தாவரம். நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி ஆகிய வகைகள் உள்ளன. இதன் மலர்மாலைகளைக் கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர். திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய கோயில்களில் தலமரமாக அரளி உள்ளது.மலர்கள் காட்சிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளன. இம்மலரை சிவபெருமான் திருச்சடையில் சூடியிருப்பதாக திருஞானசம்பந்தர் தனது "...துன்னிய எருக்கு அலரி வன்னிமுடியின் சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்...." (3:79:5) பாடலில் குறிப்பிடுகிறார்.