சக்கரவர்த்தி நயினார்

bookmark

பிறப்பும் கல்வியும்:

சமண சமயத்தைச் சேர்ந்தவர். இளம் அகவையிலேயே கல்வியில் நாட்டம் கொண்டவராக இருந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்று மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறித் தங்கப் பதக்கம் பெற்றார். முதுகலைப் பட்டமும் கல்வியியலில் பட்டமும் பெற்றார். தத்துவம், சமயம், இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு அவ்வரித்துறை நூல்களைப் படிகளானார். பின்னர் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றார்.

படைப்புகளும் பதிப்புகளும்:

சக்கரவர்த்தி நயினார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்நூல் ‘திருக்குறள் வழியில் செய்தி’ என்று தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருக்குறள் சைனக் கவிராச பண்டிதர் உரையை இவர் பதிப்பித்தார். இது மட்டுமல்லாது நீலகேசி திவாகர வாமன முனிவர் உரை, மேரு மந்திரப் புராண உரை ஆகியவற்றையும் பதிப்பித்தார். நீலகேசிக்கு முதன் முதல் உரையை வெளியிட்டவர் சக்கரவர்த்தி நயினாரே ஆவார். சமண மதம்பற்றி அறிய விரும்பிய திரு.வி.க.அவர்கள் சக்கரவர்த்தி நயினார் இல்லம் வந்து பாடம் கற்றார்.

அவர் செய்த பணிகள்:

தொடக்கத்தில் சென்னை கணக்காயர் அலுவலக எழுத்தராகப் பணி புரிந்தார். பின்னர் கீழ்க் காணும் கல்லூரிகளில் தத்துவத் துறை ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார்.


 

  • சென்னை மாநிலக் கல்லூரி (1906-1908)

  • குடந்தை அரசுக் கல்லூரி (1908-1912)

  • இராச முந்திரி அரசுக் கல்லூரி (1912-1917)

  • சென்னை மாநிலக் கல்லூரி தத்துவத் துறைத் தலைவர் (1917-1930)

  • இராச முந்திரி அரசுக் கல்லூரி முதல்வர் (1930-1932)

  • குடந்தை அரசுக் கல்லூரி முதல்வர் (1932-1938)

  • அவரை பற்றியப் பிற செய்திகள்:

    குடந்தைக் கல்லூரியில் பணி புரிந்தபோது ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்ப்பொதுமக்கள் எனப் பலரிடம் செல்வாக்குடன் விளங்கினார். குடந்தையில் மக்கள் மன்றம் ஒன்றை ஏற்படுத்தினார். டென்னிசு விளையாட்டில் ஆர்வம் கொண்டார். இவரைப் பாராட்டி ஆங்கிலேய இந்திய அரசு இந்தியக் கல்விப் பணி (ஐ.இ.ஏசு) என்னும் பட்டத்தையும் இராவ் பகதூர் பட்டத்தையும் வழங்கியது.