சிறுகீரை
சிறுகீரை
இந்தியாவில் தோட்டங்களிலோ, வீட்டுத் தோட்டங்களிலோ பயிர் செய்யப்படும் கீரை வகைகளில் இக்கீரையும் ஒன்றாகும். இக்கீரையானது வட இந்திய மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. ஏராளமாக இந்தக் கீரையானது முளைக்கீரை, தண்டுக் கீரை ஆகிய கீரைகளின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை வகையாகும். சுமார் இருபது செ.மீ உயரம் வரை செங்குத்தாக வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இச்செடி மிக மெல்லிய தோற்றமுடையது.

