தண்டுக்கீரை
தண்டுக்கீரை (Amaranthus tricolor) கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். செழிப்பான பகுதிகளில் ஓர் ஆள் உயரம் வரை வளரக் கூடியது.
தண்டுக்கீரை ஆறு மாதங்கள் வரை வளரக் கூடியது. ஆனால், 100 முதல் 120 நாட்களுக்குள் இந்தக் கீரையை அறுவடை செய்து சமைக்கும் போதுதான் தண்டுகள் நார் இல்லாமல் இளசாகவும், உண்ணுவதற்குச் சுவையாகவும் இருக்கும்.
முதிர்ந்த கீரையில் மிக அதிக அளவிலான எாிபொருள் கிடைக்கிறது. தண்டுக்கீரையைப் பருப்பு வகைகளோடு அவியல், மசியல், பொறியல் போன்ற பல விதங்களாக தயார் செய்தும் உண்ணலாம்.
