பயிர் பாதுகாப்பு
இலைவழி நுண்ணூட்டம்
இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்கவேண்டும்.
நெல் தரிசு பயறுவகைப் பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
வறட்சி மேலாண்மை
உளுந்தில் வறட்சி காலத்தில் இடைப்பருவ மேலாண்மை முறையாக 2% பொட்டாசியம் குளோரைடு + 100 பிபிஎம் போரான் தெளிக்க வேண்டும்.
ஆந்தராக்னோஸ் நோய்
இதை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். மான்கோசெப் 2 கிராம் (अ) கார்பன்டாசிம் 0.5 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைக் கருகல் நோய்
ஸ்டரப்டோசைக்கிளின் மற்றும் தாமிர ஆக்ஸிகுளோரைடு 3 கிராமுடன் கலந்து 12 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
செர்கோஸ்போரா இலைப்புள்ளி
நோயற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். கார்பன்டாசிம் 0.5கிராம் (அ) மான்கோசெப் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய்
கார்பன்டாசிம் 1கிராம் (அ) டிரைடிமார்ப் 1 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து சாம்பல் நோயை கட்டுப்படுத்தலாம்.
துரு நோய்
துரு நோய் தாக்குதல் காணப்பட்டால் மான்கோசெப் 2.5 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
மஞ்சள்சோகை
ஒரு எக்டருக்கு டைமெத்தோயேட் 750 மிலி என்ற அளவில் விதைத்த 30 நாள் கழித்து தழைத்தெளிப்பாக தெளிக்க வேண்டும்.
அறுவடை
முதிர்ந்த காய்களைப் பறித்து உலர்த்த வேண்டும். அறுவடை செய்யும்போது பயிர்களை வேரோடு பிடுங்க வேண்டும். இல்லையெனில் முழு தாவரத்தையும் வெட்டி எடுக்க வேண்டும். பின்னர் குவித்து வைத்து உலர்த்தி பயிர்களை பிரிக்க வேண்டும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 250 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஊடுபயிர்
உளுந்துடன் ஊடுபயிராக தட்டப்பயிர் சாகுபடி செய்யலாம்.
