பாதுகாப்பு முறைகள்

பாதுகாப்பு முறைகள்

bookmark

பாதுகாப்பு முறைகள்  

களை நிர்வாகம்

நடவு செய்து 15-40 நாட்களுக்குள் ஒன்று அல்லது இரண்டு முறை கைக்களை எடுக்க வேண்டும். அகன்ற இலையுடைய களைச்செடிகள் மற்றும் கோரைகள் அதிகமாய் இருக்கும் இடத்தில், 2,4 டி சோடியம் உப்பு 1.25 கி/ எக்டர் 625 லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதிக கொள்ளளவு மருந்து தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இம்முறையை நடவு செய்து 3 வாரங்களுக்குப் பிறகு, களைச்செடிகள் 3-4 இலையுடைய பருவத்தில் இருக்கும் போது தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

அழுகல் நோய்

இலையுறை அழுகல், இலையுறை கருகல், பாக்டீரியா இலை கருகல் நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ், உயிரியல் காரணி ஆகியவற்றை நடவு செய்த 45-ஆம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் 0.2 சதவீதம் என்ற வீதத்தில் 3 முறை தெளிக்க வேண்டும். 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 2 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். பசுவின் சாணம் 20 சதவீதம் கரைசலை நோய் புலப்படும் தருணத்தில் 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

புழு தாக்குதல்

குருத்துப் புழு, இலைச் சுருட்டுப் புழு கட்டுப்படுத்த 5 சதவீதம் சாறு வேப்பங்கொட்டைச் தெளிக்  வேண்டும்.

பூச்சி தாக்குதல்

தத்துப்பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்த சரியான அளவு தழைச் சத்து இட வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு அல்லது 2 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.

அறுவடை

பூங்கொத்துக்களில் 80 சதவிகிதம் கதிர்க்கிளைகள் இருத்தல் மற்றும் மேற்பகுதி வைக்கோல் நிறமாக மாற்றம் அடைதல் ஆகியவையே அறுவடை செய்வதற்கான அறிகுறிகள் ஆகும். நெற்பயிரில், தண்டுடன் சேர்ந்திருக்கும் நெற்கதிர்களை வெட்டி எடுக்க வேண்டும். இதனை கைவினை அறுவடை அல்லது அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யலாம்.

மகசூல்

மத்திய-பின் பருவ இரகங்கள் 60-70 குவிண்டால்/எக்டர் கிடைக்கும். மகசூல் வரை குறுகிய கால இரகப் பயிர்கள் 45-55 குவிண்டால்/எக்டர் கிடைக்கும். மகசூல் வரை ஒரு பருவத்தில் 40-60 குவிண்டால் /எக்டர் தீவனம் கிடைக்கும்.