போன்சாய் மரம் வளர்த்தல்

போன்சாய் மரம் வளர்த்தல்

bookmark

மண்

மக்கிய இலைதழை, களிமண், மணல் ஆகியவற்றை சமமாகக் கலந்த கலவையைப் அடியுரமாக பயன்படுத்த வேண்டும்.

தொட்டி

எந்தத் தொட்டியாக இருந்தாலும் அதிகப்படியான நீர் அடியில் தேங்காதவாறு, அடிப்பகுதியில் ஓட்டை இருப்பது மிகவும் அவசியம். அந்த ஓட்டையின் மேல் செங்கல் சில்லை வைத்து மூடி, அதன் பிறகே மண்ணை நிரப்ப வேண்டும். அதிகப்படியான நீர் இருந்தால் வெளியேறிவிடும். அடியில் நீர் தேங்கினால், வேர் அழுகி செடி செத்துவிடும். செவ்வக வடிவத் தொட்டியில் மரத்தை நடுவிலிருந்து சற்றுத் தள்ளி வலப்புறம் அல்லது இடதுபுறம் நடவேண்டும். வட்டம், சதுரம் ஆகியவற்றில் நடுவில் நட வேண்டும்.

நடவு செய்தல்

தேர்வு செய்த மரக்கன்றை தொட்டியில் நடவு செய்ய வேண்டும். முதல் முறையாக வளர்ப்பவர்கள் முதல் முயற்சியாக நம் நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும். அனுபவம் உள்ளவர்கள் வெளிநாட்டு மரங்களை வளர்க்கலாம்.