மிதிலைக் காட்சிப் படலம் - 623
பிராட்டி பின்னும் வேட்கை மிகுதியாற் பிதற்றல்
623.
என்று இவை இனையன விளம்பும் ஏல்வையின்.
‘நின்றனன். இவண்’ எனும்; ‘நீங்கினான்’ எனும்;
கன்றிய மனத்து உறு காம வேட்கையால்.
ஒன்று அல. பல நினைந்து. உருகும்காலையே.
என்று இவை- என்று இவற்றையும்; இனையன - இவை போன்ற
பலவற்யையும்; விளம்பும் ஏல்வையின் - (சீதை) தனக்குள் கூறுகின்ற
பொழுதில்; இவண் நின்றனன் எனும் - (உரு வெளிப்பாட்டில்
அவன் தன் எதிரில் தோன்ற) நான் முன்பு பார்த்த வீரன் இதோ
இங்கு நிற்கின்றான் என்பாள்; நீங்கினான் எனும் - (உடனே
அவ்வுரும் மறைதலால்) நீங்கிவிட்டான் என்பாள்; கன்றிய மனத்து
- (இவ்வாறு சீதை) வெதும்பிய மனத்தில்; உறு காம வேட்கையால் -
மிகுந்த காம விருப்பத்தால்; ஒன்று அல பல நினைந்து - ஒன்று
மட்டுமல்ல. பலவற்றையும் எண்ணி எண்ணி்; உருகும் காலை -
மனம் உருகும்பொழுது; காம வேட்கை; காமனால் உண்டாகிய
வேட்கை; காமமாகிய வேட்கை. 60
