சப்தஸ்தானம்
 
                                                    பாடல் 886
தனன தானன தான தனத்தன 
தனன தானன தான தனத்தன 
தனன தானன தான தனத்தன ...... தனதான 
மருவு லாவிடு மோதி குலைப்பவர் 
சமர வேலெனு நீடு விழிச்சியர் 
மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர் 
மதன னோடுறழ் பூச லிடைச்சியர் 
இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர் 
மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே 
சருவி யாரையும் வாவெ னழைப்பவர் 
பொருளி லேவெகு ஆசை பரப்பிகள் 
சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே 
சலச மேவிய பாத நி¨த்துமுன் 
அருணை நாடதி லோது திருப்புகழ் 
தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே 
அரிய கானக மேவு குறத்திதன் 
இதணி லேசில நாளு மனத்துடன் 
அடவி தோறுமெ வாழியல் பத்தினி ...... மணவாளா 
அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட 
உழவர் சாகர மோடி யொளித்திட 
அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே 
திருவின் மாமர மார்பழ னப்பதி 
அயிலு சோறவை யாளுது றைப்பதி 
திசையி னான்மறை தேடிய முற்குடி ...... விதியாதிச் 
சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி 
பதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதி 
திருவை யாறுட னேழுதி ருப்பதி ...... பெருமாளே. 
 

 
                                            