திருவலஞ்சுழி
 
                                                    பாடல் 876
தனன தந்தன தானா தானன 
தனன தந்தன தானா தானன 
தனன தந்தன தானா தானன ...... தனதான 
மகர குண்டல மீதே மோதுவ 
வருண பங்கய மோபூ வோடையில் 
மருவு செங்கழு நீரோநீவிடு ...... வடிவேலோ 
மதன்வி டுங்கணை யோவா ளோசில 
கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை 
மறலி யென்பவ னோமா னோமது ...... நுகர்கீத 
முகர வண்டின மோவான் மேலெழு 
நிலவ ருந்துபு ளோமா தேவருண் 
முதிய வெங்கடு வோதே மாவடு ...... வகிரோபார் 
முடிவெ னுங்கட லோயா தோவென 
வுலவுகண்கொடு நேரே சூறைகொள் 
முறைய றிந்தப சாசே போல்பவ ...... ருறவாமோ 
நிகரில் வஞ்சக மாரீ சாதிகள்
தசமு கன்படை கோடா கோடிய 
நிருத ரும்பட வோரே வேவியெ ...... யடுபோர்செய் 
நெடிய னங்கனு மானோ டேயெழு 
பதுவெ ளங்கவி சேனா சேவித 
நிருப னம்பரர் கோமான் ராகவன் ...... மருகோனே 
சிகர வும்பர்கள் பாகீ ராதிகள் 
பிரபை யொன்றுபி ராசா தாதிகள் 
சிவச டங்கமொ டீசா னாதிகள் ...... சிவமோனார் 
தெளியு மந்த்ரக லாபா யோகிகள் 
அயல்வி ளங்குசு வாமீ காமரு 
திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே. 
 

 
                                            