பேரூர்
 
                                                    பாடல் 949
ராகம் - சாருகேசி 
தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2) 
தகதிமிதக-3, தகிட-1 1/2 
தானாத் தனதான தானாத் ...... தனதான
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான 
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
போராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே. 
பாடல் 950 
தத்த தானன தத்த தானன 
தானா தானா தானா தானா ...... தனதான 
மைச்ச ரோருக நச்சு வாள்விழி 
மானா ரோடே நானார் நீயா ...... ரெனுமாறு 
வைத்த போதக சித்த யோகியர் 
வாணாள் கோணாள் வீணாள் காணா ...... ரதுபோலே 
நிச்ச மாகவு மிச்சை யானவை 
நேரே தீரா யூரே பேரே ...... பிறவேயென் 
நிட்க ராதிகண் முற்பு காதினி 
நீயே தாயாய் நாயேன் மாயா ...... தருள்வாயே 
மிச்ச ரோருக வச்ர பாணியன் 
வேதா வாழ்வே நாதா தீதா ...... வயலூரா
வெற்பை யூடுரு வப்ப டாவரு 
வேலா சீலா பாலா காலா ...... யுதமாளி 
பச்சை மாமயில் மெச்ச வேறிய 
பாகா சூரா வாகா போகா ...... தெனும்வீரா 
பட்டி யாள்பவர் கொட்டி யாடினர் 
பாரூ ராசூழ் பேரூ ராள்வார் ...... பெருமாளே. 
 

 
                                            