விசுவை
 
                                                    பாடல் 991
தனன தனந்த தனன தனந்த 
தனன தனந்த ...... தனதான 
திருகு செறிந்த குழலை வகிர்ந்து 
முடிமலர் கொண்டொ ...... ரழகாகச் 
செயவரு துங்க முகமும் விளங்க 
முலைகள் குலுங்க ...... வருமோக 
அரிவையர் தங்கள் வலையில் விழுந்து 
அறிவு மெலிந்து ...... தளராதே 
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு 
னடியிணை யன்பொ ...... டருள்வாயே 
வரையை முனிந்து விழவெ கடிந்து 
வடிவெ லெறிந்த ...... திறலோனே 
மதுரித செஞ்சொல் குறமட மங்கை 
நகிலது பொங்க ...... வரும்வேலா 
விரைசெறி கொன்றை யறுக புனைந்த 
விடையரர் தந்த ...... முருகோனே 
விரைமிகு சந்து பொழில்கள் துலங்கு 
விசுவை விளங்கு ...... பெருமாளே. 
 

 
                                            