வேதாரணியம்
 
                                                    பாடல் 839
ராகம் - மோஹனம் 
தாளம் - சதுஸ்ர ஜம்பை (7) 
தானன தத்தத் தந்தன தந்தன ...... தனதான
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி ...... கழிகாமஞ் 
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு ...... துணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தின ...... முழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனை ...... தருவாயே
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை ...... யெழுநாளே
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் ...... மருகோனே
வேழமு கற்கு தம்பியெ னுந்திரு ...... முருகோனே
வேதவ னத்தற் சங்கரர் தந்தருள் ...... பெருமாளே. 
பாடல் 840 
தான தனத்தன தந்த தான தனத்தன தந்த 
தான தனத்தன தந்த ...... தனதான 
சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து 
சீத வரிக்குழல் கிண்டி ...... யளிமூசத்
தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு 
தேச மனைத்தையும் வென்ற ...... விழிமானார் 
மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து 
மாலி லகப்பட நொந்து ...... திரிவேனோ 
வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள் 
மாயை தொலைத்திட வுன்ற ...... னருள்தாராய் 
பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று 
பார மலைக்குள கன்று ...... கணையாலேழ் 
பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து 
பால்வ ருணத்தலை வன்சொல் ...... வழியாலே 
வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை 
வீட ணருக்கருள் கொண்டல் ...... மருகோனே 
மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து 
வேத வனத்தில மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 841
தானன தத்த தனந்த தானன தத்த தனந்த 
தானன தத்த தனந்த ...... தனதான 
நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம் 
நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும் 
நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள் 
நூல்வல்ம லர்ப்பொரு துண்டம் ...... அவையாலும் 
சேலினை யொத்திடு கண்க ளாலும ழைத்திடு பெண்கள் 
தேனிதழ் பற்றுமொ ரின்ப ...... வ¨ல்முழ்கிச் 
சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி 
தேறுத வத்தை யிழந்து ...... திரிவேனோ 
வாலஇ ளப்பிறை தும்பை யாறுக டுக்கை கரந்தை 
வாசுகி யைப்புனை நம்பர் ...... தருசேயே 
மாவலி யைச்சிறை மண்ட ஓரடி யொட்டிய ளந்து 
வாளி பரப்பியி லங்கை ...... யரசானோன் 
மேல்முடி பத்தும ரிந்து தோளிரு பத்தும ரிந்து 
வீரமி குத்தமு குந்தன் ...... மருகோனே 
மேவுதி ருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து 
வேதவ னத்தில மர்ந்த ...... பெருமாளே. 
 

 
                                            